உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு காலதாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் ‘கட்’

திருவள்ளூர்: மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், பள்ளிக்கு தாமதமாக வந்த ஆறு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பள பிடித்தம் செய்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பள்ளி நேரத்தில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது திருவள்ளூர் ஒன்றியம் மெய்யூர் தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் ஒன்றியம் முகப்பேர் தொடக்கப் பள்ளி, பூந்தமல்லி ஒன்றியம் குத்தம்பாக்கம் தொடக்கப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் பணிபுரியும் ஆறு ஆசிரியர்கள் பணிக்கு வராமலும் மற்றும் கால தாமதமாகவும் வந்தது தெரிந்தது. இதையடுத்து ஆறு ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்