உள்ளூர் செய்திகள்

தேசிய ஆராய்ச்சி கழகத்துடன் வேளாண் பல்கலை ஒப்பந்தம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, மத்திய அரசின் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பல்கலை பதிவாளர் சந்தானகிருஷ்ணன் முன்னிலையில் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத் தலைவர் சோம்நாத் கோஷ், பல்கலை வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சுப்பையன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, பல்கலையின் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் செய்முறைகள் ஆகியவற்றுக்கு உரிமத்தை பெற்றுக் கொடுக்கவும், வணிக மயமாக்கவும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் உதவி செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்