சமச்சீர் கல்வி புத்தகங்கள் தயாரிப்பு பணி ஜரூர்
சமச்சீர் கல்வி புத்தகங்கள் மே மாதம் தயாராகி, ஜூன் முதல்தேதி மாணவர்கள் கையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் மீதியுள்ள 2 முதல் 5ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இப்புதிய கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு விட்டது. அதை அச்சிடும் பணியும் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. மீதியுள்ள வகுப்புகளுக்கு 5.35 கோடி புத்தகங்கள் தேவைப்படுகிறது. இவை ஐதராபாத், கொச்சின், பெங்களூரு உட்பட பல நகரங்களில் உள்ள 87 அச்சகங்களில் அச்சிடப்பட்டு வருகிறது. மே மாத மத்திக்குள் அனைத்து வகுப்புகளுக்குமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.