குப்பையில் மர்ம பொருள் வெடித்து 10ம் வகுப்பு மாணவன் காயம்
சூலுார் : சுல்தான்பேட்டை அடுத்து பொன்னாக்காணியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இரு நாட்களுக்கு முன் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.குப்பையை ஓரிடத்தில் குவித்து தீ வைக்குமாறு ஆசிரியை கூறியுள்ளனர். 10 வகுப்பு மாணவன் சுபாஷ் குப்பையை எரிக்கும் போது, அதில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்தது. அதில் அந்த மாணவனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவன் சூலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுல்தான்பேட்டை போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் போலீசார் பள்ளிக்கு சென்று தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.