மனம் தளராமல் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவர்
இளையான்குடி : இளையான்குடி அருகே வடக்குசமுத்திரத்தில் தந்தை இறந்த நிலையிலும் மனம் தளராத மாணவன் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பின், தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார்.இளையான்குடி அருகே உள்ள வடக்கு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான அருள்சாமிக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவர்களால் கைவிடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டில் இருந்தபோது நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இதனால் 10ம் வகுப்பு படிக்கும் இவரது மகன் நிதீஷ்குமார் மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மிகவும் வேதனை அடைந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று நிதீஷ்குமார் தனது தந்தை இறந்த நிலையிலும் மனம் தளராமல் சாலைக்கிராமம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்று அறிவியல் தேர்வு எழுதிய பின், தன் தந்தைக்கு இறுதி சடங்கை செய்தார்.