உள்ளூர் செய்திகள்

நடந்து முடிந்தது நீட் தேர்வு; ஜூன் 14ல் ரிசல்ட்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு, தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று (மே 05) மதியம் 2 மணிக்கு துவங்கியது. மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஜூன் 14ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்ற நீட் தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.நீட் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. அதன்படி, 2024 - 25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும், 557 நகரங்களில் இன்று( மே 05) நடைபெற்றது.தமிழகம் உட்பட நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு துவங்கி நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சென்னையில் 36 மையங்களில் மொத்தம் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை ஆர்வமுடன் எழுதினர்.மதிப்பெண் எப்படி?நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 50 கேள்விகள் என, 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில், 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என, மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண், 'நெகட்டிவ்' என்ற அடிப்படையில் குறைக்கப்படும்.ஜூன் 14ல் ரிசல்ட்இன்று நடந்து முடிந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் 14ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்