உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஈஸி; பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்

சேலம்: நேற்று நடந்த பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு எளிதாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடந்தது. நடப்பு கல்வியாண்டில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும், ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கு, 90 நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், கருப்பு பால்பாயின்ட் பேனாவில் மட்டுமே ஷேடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த வேதியியல் மற்றும் கணித தேர்வுகள் கடினமாக இருந்ததால், இத்தேர்வையும் மாணவர்கள் பதட்டத்துடன் எதிர்கொண்டனர். ஆனால், வினாத்தாளில் எவ்வித பிழையும் இல்லாமல், கச்சிதமாக கேட்கப்பட்டிருந்ததுடன் எளிதாகவும் இருந்ததால் உற்சாகம் அடைந்தனர். இதுகுறித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கம்ப்யூட்டர் சயின்ஸ் வினாத்தாளில் சிறு சிறு பிழைகள் இருக்கும். ஆனால், நடப்பாண்டில் துல்லியமாக இருந்தது. மேலும் வினாக்களும் எளிதாகவும், எதிர்பார்க்கப்பட்டதாகவும் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் மட்டுமே, மதிப்பெண் தவற வாய்ப்புள்ளது. இன்ஜினியரிங் சேர்க்கையில், ஒரே கட் ஆப் அமையும் மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் மதிப்பெண் கைக்கொடுக்கும் என்பதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்