உள்ளூர் செய்திகள்

நிலவை நெருங்கியது சந்திரயான் - 3 விண்கலம்

பெங்களூரு: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் - 3 விண்கலம், நேற்று அடுத்தக்கட்ட நிலைக்கு செலுத்தப்பட்டது. இதன்படி, நிலவை நெருங்கியுள்ளது.நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த, ஜூலை 14ல் செலுத்தியது. இம்மாதம், 5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, சந்திராயன் -3 நேற்று வெற்றி கரமாக செலுத்தப்பட்டது. நிலவை அது நெருங்கியுள்ளது.அடுத்ததாக, வரும், 14 மற்றும் 16ம் தேதிகளில், அடுத்தச் சுற்றுக்கு விண்கலம் செலுத்தப்பட உள்ளது. வரும், 23ம் தேதி விண்கலம் சுமந்து சென்றுள்ள, லேண்டர் எனப்படும் தரையிறங்கும் சாதனம் அதில் இருந்து பிரிவு நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, ரோவர் எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்