அறிவியல் கண்டுபிடிப்பில் மாநில அளவில் 3ம் இடம்
பாப்பிரெட்டிப்பட்டி: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தில், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்படுகிறது.அதன்படி, மாநில அளவில், அறிவியல் கண்டுபிடிப்பிற்கான போட்டி கடந்த மாதம் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் கார்த்திக், 17, சஞ்சய்குமார், 17, ராகவன், 16, சுஜித் குமார், 17 ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள், 2 ரயில்வே நடைமேடைகளுக்கு இடையில், தானியங்கி நகரும் நடைபாதையை கண்டுபிடித்து, மாநில அளவில், 3ம் இடம் பிடித்தனர். இதற்கான பரிசுத்தொகை, 10,000 ரூபாய்க்-கான காசோலையை, மாவட்ட சி.இ.ஓ., ஜோதி சந்திரா மாணவர்-களுக்கு வழங்கி பாராட்டினார்.அப்போது, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்த்-தென்றல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலு, மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர் கவுதம் சண்முகம் உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர்.