உள்ளூர் செய்திகள்

போட்டித் தேர்வர்களுக்கான இலவச ஆலோசனை முகாமில் 55 தேர்வர்கள் பங்கேற்பு

உடுமலை: உடுமலை கிளை நுாலகம்-1ல், போட்டித் தேர்வர்களுக்கான இலவச ஆலோசனை முகாமில் 55 தேர்வர்கள் பங்கேற்றனர். உடுமலை, கிளை நுாலகம்-1 வாசகர் வட்டம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வர்களுக்கான இலவச ஆலோசனை முகாம் நடந்தது. பயிற்சியில், வருவாய்க் கோட்டாட்சியர் சாதனைக் குறள் பேசிகையில், "தேர்வு எழுதுவோர், விவேகத்துடன் செயல்படுவதோடு, தொடர்ந்து முயற்சிசெய்வது, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக்கொள்வதே தேர்வில் வெற்றியைத் தேடித் தரும்" என்றார். டி.எஸ்.பி., கனகேஸ்வரி பேசும்போது, "வெற்றி பெறுவதற்கு, எந்த சூழ்நிலைகளையும் தடையாக கருதக்கூடாது, கடின உழைப்பு மற்றும் தீவிர பயிற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்" என்றார். முகாமில், 55 தேர்வர்கள், பள்ளி ஆசிரியர் கண்ணபிரான், கோப்பெருந்தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்