உள்ளூர் செய்திகள்

கட்டமைப்பு தரவரிசை பட்டியல்: புதுச்சேரி பல்கலை., 8-வது இடம்

புதுச்சேரி : இந்திய நிறுவன கட்டமைப்பு தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது.இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, இந்தியா முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் சிறப்புக் கல்லுாரிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது.2024 தரவரிசையில், இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பு ஏழு அளவுருக்களின் அடிப்படையில் பல்கலைக் கழகங்களை மதிப்பீடு செய்தது.வேலை வாய்ப்பு செயல்திறன், கற்பித்தல் கற்றல் வளங்கள், ஆராய்ச்சி, தொழில் வேலை வாய்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, வேலை வாய்ப்பு உத்திகள் மற்றும் ஆதரவு, எதிர்கால நோக்குநிலை மற்றும் வெளிப்புறக் கருத்து முக்கிய அளவுகோலாக எடுத்துக்கொள்ளப்பட்டு மதிப்பிடப்பட்டது.இந்த தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 1,000க்கு 981.28 மதிப்பெண்களுடன் இந்தியாவின் சிறந்த மத்தியப் பல்கலைக் கழகங்களில் 8வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2023 தரவரிசை பட்டியலில் 969.34 மதிப்பெண்களுடன் புதுச்சேரி பல்கலைக்கழகம் 17வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு, கூறு கையில், 'புதுச்சேரி பல்கலைக்கழகம் இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பு தரவரிசை பட்டியலில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.தேசத்தின் வளர்ச்சியை நோக்கி புதுச்சேரி பல்கலைக்கழகம் உயர்கல்வி நிறுவனமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் பல்கலைக் கழகத்தின் அனைவரது ஒத்துழைப்பே இதற்கு காரணம்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தை வருங்காலத்தில் இன்னும் பெரிய உயரத்திற்கு உயர்த்துவதற்கான அர்ப்பணிப்பான முயற்சிகளை அனைவரும் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்