பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்கள்
தொழிற்கல்வி அல்லாது மேல்நிலையில் வழக்கமான பிரிவில் படித்த மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள்: பொதுப்பிரிவு மாணவர்கள் - கணிதம், இயற்பியல், வேதியியல் சேர்த்து 50 சதவீதம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் - கணிதம், இயற்பியல், வேதியியல் சேர்த்து 45 சதவீதம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினர் - 40 சதவீதம். எஸ்.சி/எஸ்.சி.ஏ/எஸ்.டி - 35 சதவீதம். பள்ளி மேல்நிலையில் தொழிற்கல்வி பிரிவில் படித்த மாணவர்களுக்கும் மேற்கூறிய மதிப்பெண் வகைகள்தான் பொருந்தும்.