பொறியியல் கல்லூரிகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு
கடந்த ஜனவரியில் வெளியான தேர்வு முடிவு தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் ஒரு பட்டியலையும், பாட வாரியான தேர்வு முடிவு அடிப்படையில் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மாநில அளவிலான, தரவரிசை பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறும்போது, "அந்தந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களிடம் தான், மாணவர்கள் தேர்ச்சி விவரம் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. எனவே, அந்தந்த அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும் கல்லூரிகளின், தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும்" என்றனர். சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளின், தரவரிசை பட்டியலை, www.annatech.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தமிழகத்தில் சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளின், தரவரிசை பட்டியலை வெளியிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில், தனியார் கல்லூரிகளின், தரவரிசை பட்டியலை வெளியிட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.