உள்ளூர் செய்திகள்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்

மத்திய, மாநில, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் என இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க பொது நுழைவுத் தேர்வு அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்தது. இது குறித்து தமிழக சுகாதாரத துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய்யிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு எந்த ரூபத்தில் வந்தாலும் அதை முழு வீச்சில் எதிர்ப்போம் என்று கூறினார். மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான பாடங்களை தயாரித்து இணையதளத்தில் பொதுமக்கள் கருத்துக்களை கேட்க வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்