உள்ளூர் செய்திகள்

வினா-விடை புத்தகங்கள் பிப்ரவரியில் விற்பனை

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பிற்கான வினா-விடை புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் தயாரித்துள்ளது. இந்த புத்தகங்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் வந்துவிடும். பிப்ரவரி 10க்கு பின் விற்பனை நடைபெறும் என பெற்றோர்-ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து துறை வட்டாரங்கள் கூறும்போது வினா-விடை புத்தகங்களில் தவறான பகுதிகள் இடம் பெறாத வகையில் பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கேள்வித்தாள் அமைப்பில் தேர்வுத்துறை கடைசியாக செய்த மாற்றத்தையும் பதிவு செய்துள்ளோம் என்றனர்.  ஒரு செட் வினா-விடை புத்தகங்களின் விலை 250 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்