உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு

கோவை: பாரதியார் பல்கலையில் புதிதாக இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாரதியார் பல்கலை ஆட்சிக்குழுவில் (சிண்டிகேட்) கல்லூரி முதல்வர்கள் இருவர் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த 18ம் தேதி தேர்தல் நடத்துவது பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது. சின்னவேடம்பட்டி என்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வேலுசாமி, நீலம்பூர் மகாராஜா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் லோகநாதன் ஆகியோர் மட்டுமே தேர்தலில் மனுத்தாக்கல் செய்தனர். இதனால், எவ்வித போட்டியும் இன்றி இருவரும் புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்