உள்ளூர் செய்திகள்

‘எதிர்மறை சிந்தனையுள்ள மாணவர்களிடம் நட்பு கூடாது’

டி.வி.ஆர்.,அகாடமி, எஸ்.ஆர்.எம். பல்கலை.,சென்னை வழங்கிய ‘தினமலர் ஜெயித்து காட்டுவோம் 2008’ நிகழ்ச்சி திண்டுக்கல் நாயுடு மகாஜன சங்க திருமண மண்டபத்தில் அக்., 5ம் தேதி நடந்தது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில், மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எம். கண்ணன் பேசுகையில், ‘மாணவர்கள் தங்களுக்காக படிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் சேர 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் பெறும் மதிப்பெண்களும் முக்கியம். எதிர்மறை சிந்தனையுள்ள மாணவர்களிடம் நட்பு கூடாது. தியானத்தினால் மனதை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்,’என்றார், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனை:கணிதம்- சுந்தரபாண்டியன்(எம்.எஸ்.பி., மேல்நிலைபள்ளி, திண்டுக்கல்): பார்முலாக்களை தொடர்ந்து எழுதி பாருங்கள். ஒரு மார்க் பெற தினமும் வெவ்வேறு நோட்ஸ்களில் உள்ள பயிற்சியை செய்வது நல்லது. நேர மேலாண்மை மிகவும் முக்கியம். ஆங்கிலம்-ஜேசுராஜா பயஸ்(நேருஜி நகராட்சி மே.நி.ப., திண்டுக்கல்): வினா வங்கியில் உள்ள பயிற்சி வினாக்களை செய்து பார்ப்பதால் அதிக மதிப்பெண் பெறலாம். பழமொழிகளை தனிநோட்டில் எழுதி மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அறிவியல்-தங்கவேல்(நேருஜி நகராட்சி மே.நி.ப., திண்டுக்கல்): தேர்வின் போது வினாவை சரியாக தேர்வு செய்யுங்கள். புளுபிரிண்டை அறிந்திருப்பது அவசியம். ஒரு மார்க் வினாக்களை எடுத்ததும் எழுத வேண்டாம். இவ்வாறு ஆலோசனை வழங்கினர். மதியம் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கிய ஆலோசனை:ஆங்கிலம்-டி.என். கபிலன்(அரசு மே.நி.ப., நத்தம்): மார்க்கிற்கு ஏற்ப விடை தாருங்கள். தெரிந்ததையெல்லாம் எழுத வேண்டாம். நாளிதழ் படிப்பதும், வரலாற்று சம்பவங்களை தெரிந்து வைப்பதால் பதில் தர வாய்ப்பாக இருக்கும்.பொதுக்கட்டுரை, கடிதம் எழுதும்போது சொந்த நடை இருப்பது சிறப்பு. கணிதம்-ஸ்டெல்லா அருள்செல்வி(லூர்தன்னை பெண்கள் மே.நி.ப., திண்டுக்கல்): படம் வரைவதை மறப்பதால் மார்க் குறையும். விடை எழுதிவிட்டு அவசியம் திருப்பி பாருங்கள். வினாக்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை. இயற்பியல்-எல்.ஜி. டிக்சன்(எஸ்.எம். பி.எம்., மே.நி.ப.,திண்டுக்கல்): விடைத்தாளில் அடித்தல், திருத்தல் கூடாது. தெரிந்த பதில் அனைத்தையும் எழுத தேவையில்லை. முக்கிய வினாக்களை பட்டியலிட்டு பதில் தந்து பழகுங்கள். வேதியியல்-நரசிங்க சக்தி(அரசு மே.நி.ப.,கம்பளியம்பட்டி): தன் மதிப்பீடு பகுதியில் இருந்து 60 சதவீத கேள்விகளும், மூலக்கூறு, அணுக்கரு தலைப்பில் இருந்தும் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. விலங்கியல் மற்றும் தாவரவியல்-தங்கவேல் (நேருஜி நகராட்சி மே.நி.ப.,): 5, 10 மார்க் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து படிப்பதால் ஒரு மார்க் கேள்விகளுக்கும் விடை தர இயலும். இவ்வாறு அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்