உள்ளூர் செய்திகள்

உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் நடனமாவது ஆடுங்கள்

கொடைக்கானல்: "உடற்பயிற்சி செய்யாவிட்டால், நடனமாவது ஆடுங்கள்," என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் விளையாட்டு விழா நடந்தது.  பரிசுகளை வழங்கி மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி இயக்குநர் சாத்தையா பேசியதாவது: "உடல் நலன் மிக முக்கியம். உட்கார்ந்தபடியே நாம் படிக்கிறோம், வேலை பார்க்கிறோம். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு மிக மிக அவசியம். உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ செய்யாவிட்டால், ரூமிற்குள் நடனமாவது ஆட வேண்டும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்