உள்ளூர் செய்திகள்

மாணவர் சமுதாயம் என்ற தலைப்பில் சொற்பொழிவு

ஈரோடு: பெருந்துறை மகாராஜா இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், மாணவர் சமுதாயம் என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சொற்பொழிவு நிகழ்த்தினார். கல்லூரி தாளாளர் தரணீதரன் தலைமை வகித்தார். முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார். சிறப்பு அலுவலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். தமிழ் துறை பேராசிரியர் ராஜேந்திரன், அறிமுக உரையாற்றினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், "மாணவர்களுக்கு, கல்வி ஒன்றே, அனைத்து வாசல் கதவுகளையும் திறக்கும் திறவு கோலாக உள்ளது. மாணவர்கள், மதிப்பெண் என்ற நோக்கத்தோடு மட்டும் படிக்காமல், சமுதாய வளர்ச்சிக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் படிக்க வேண்டும். கலைமகள் விழா (சரஸ்வதி பூஜை) அன்று, மாணவர்கள் அனைவரும், ஒரு புத்தகமாவது வாங்க படிக்க வேண்டும். மாணவர்கள் தன்னை வெல்வதற்கு, கல்வியை துணையாக கொள்ள வேண்டும்,&'&' என்றார். பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்