மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான வழிகாட்டு முகாம்
கீழக்கரை: திருப்புல்லாணி ஒன்றிய கமிஷனர் சின்னையா கூறியதாவது: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்பகுதி மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் நாளை 9ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். 10, பிளஸ் 2 மார்க்ஷீட், டி.சி., வருமானச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு, தந்தை போட்டோ-4, கல்லூரி சான்று, அண்ணா பல்கலைக்கழக நேர்முகத்தேர்விற்கான அழைப்பாணை முதலிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம், என்றார்.