உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்

மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கமிஷனர் கதிரவன் தலைமையில் நடந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன் பள்ளியில் நடந்த போட்டியை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். கபடி போட்டியில் 26 அணிகளை சேர்ந்த 312 மாணவர்கள் பங்கேற்றனர். கூடைப்பந்து,டேபிள் டென்னிஸ், செஸ், பந்து எறிதல், கேரம், சிலம்பம், நீச்சல், துப்பாக்கி சுடும் போட்டிகள் வெவ்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் நடக்கும் விழாவில் பரிசளிக்கப்படும். கல்வி அலுவலர் மேரி, கல்விக் குழுத்தலைவர் சுகந்தி, சுகாதார குழுத் தலைவர் முனியாண்டி, கபடி கழகச் செயலாளர் அகஸ்டின், தலைமை ஆசிரியர் முருகேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்