மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. திருக்கோவிலூர் வட்டார வளமையத்தில் ஒன்றியத்தை சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி, பந்து எறிதல், பலூன் வெடித்தல், தண்ணீர் நிரப்புதல், படம் வரைதல் போன்ற போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலை பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாற்றுத்திறன் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டியில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.