இலவச சித்தாந்தப் பயிற்சியில் சேர அழைப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சைவநெறிக் கழகம் சார்பில், 29வது ஆண்டு இலவச சித்தாந்தப் பயிற்சி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்.5 கடைசி நாள். திருவாவடுதுறை ஆதீனம் ஆசியுடன் வரும் மே 4 முதல் 18 வரை நடக்கும் பயிற்சியில், சென்னை, மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பொதுநிலை, சிறப்பு நிலை என இரு பிரிவில் பாடம் நடத்துகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். பயிற்சிக் கட்டணம் கிடையாது. தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படும். ஆண், பெண் தங்குவதற்கு தனி இடவசதி உண்டு. விண்ணப்ப படிவம் பெற, சுயமுகவரி இட்ட உறையுடன், ’தலைவர், சைவநெறிக்கழகம், 809/8,மெயின் ரோடு, விக்கிரமசிங்கபுரம்-627 425’ என்ற முகவரிக்கு கடிதம் எழுதலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஏப்.5க்குள் வந்து சேர வேண்டும். இது பற்றி 99941 46395 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சைவ சித்தாந்தக் கழக செயலாளர் கந்தசுவாமி தெரிவித்தார்.