உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் பாரதியார் பிறந்தநாள் விழா

கோவை பாரதியார் பல்கலையில், பாரதியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கவிஞர் கவிதாசன் கலந்துகொண்டு குத்துவிளக் கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பாரதி கண்ட கனவு நனவாகிறதா அல்லது, நலிந்து போகிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கவிஞர் கவிதாசன் தலைமையில் நடந்த இப்பட்டி மன்றத்தில், பேச்சாளர்கள் உமாமகேஸ்வரி, ரவிக்குமார், கோட்டீஸ்வரன், பூங்கொடி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், பதிவாளர் செந்தில்வாசன், தமிழ்த்துறை தலைவர் ஜெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்