மினி மாரத்தான் போட்டி மாணவிகள் பங்கேற்பு
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சார்பில் இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.மாணவர்களுக்கு காளவாசல் முதல் கல்லுாரி வரை 10 கி.மீ., துாரமும், மாணவியருக்கு பைகாராவிலிருந்து கல்லுாரி வரை 4 கி.மீ., துாரம் போட்டி நடந்தது. தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் ஹரி தியாகராஜன் துவக்கி வைத்தார். முதல்வர் அபய்குமார், டீன் வாசுதேவன், உடற்கல்வி இயக்குனர் சந்திரசேகரன், உதவி இயக்குனர் கார்த்திக் கலந்து கொண்டனர். மாணவர்கள் மணிவாசகன், ரகு, புவியரசு, வினிதா, பிரியங்கா, வனச்செல்வி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.