தொழிற்சாலை பாதுகாப்பு படிப்பிற்கு ஜொலிக்கும் எதிர்காலம்!
தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் சீனிவாசன் பேசியதாவது:பொதுவாக பாதுகாப்பு என்பதை நம் உள்ளுணர்வு எப்போதும் எச்சரித்துக்கொண்டு தான் உள்ளது. தொழிற்சாலை பாதுகாப்பு என்பதில் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் தான் நாட்டில் போபாலில் சம்பவம் ஏற்பட்டது. இதன் பின் தான் நாடு முழுவதும் தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. தொழிற்ச்சாலை விபத்துக்கள் மக்களையும், சுற்றுச்சூழலை பாதிக்கும். தமிழகத்தில் பட்டாசு தொழிற்ச்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்கள் உயிர்காக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி, மேற்பார்வையாளர். நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. பல வெளிநாடுகளின் முதலீடுகளும் அதிகரிக்கின்றன. ஆயிரம் தொழிலாளர்கள் இருந்தால் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சேப்டி அதிகாரிகள் உட்பட சில பணியிடங்களை நியமிக்க வேண்டும். சேப்டி ஆபீசர்ஸ், சேப்டி இன்ஜினியர்கள், மேற்பார்வையாளர் உட்பட இத்துறைக்கான பணியிடங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதுதொடர்பான படிப்புகள் முடித்தால் உடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.