உள்ளூர் செய்திகள்

வேதியியல் சாதனைக்காக தமிழருக்கு நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: 2009ம் ஆண்டிற்கான வேதியியல் துறை கண்டுபிடிப்புக்காக தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தை சேர்ந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள எம்.ஆர்.சி., ஆய்வகத்தில் ரைபோசோம் தொடர்பான இவரது ஆராய்ச்சிக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. இவருடன் இந்த விருதை அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டீட்ஸ் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அடா இ.யோனத் ஆகியோர் பகிர்ந்து கொள்கிறார்கள். தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1952ல் சிதம்பரத்தில் பிறந்தவர். தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இதற்கு முன்னராக தமிழகத்தை சேர்ந்த சர் சி.வி.ராமன் மற்றும் சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்