உள்ளூர் செய்திகள்

பி.எஸ்சி., வேளாண்மைக்கு இளங்கலை பட்ட அந்தஸ்து

அரசுப் பணிகளில் நியமனத்தில் புதிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் வழங்கப்படும் இளநிலைப் பட் டங்களையும் (பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி. எஸ்சி.,) மேல்நிலை பள்ளிக் கல்விக்குப் பின் ஐந்தாண்டு சட்டப்படிப்பில் வழங்கப்படும் பி.எல்., பட்டத்தையும், இளங்கலை மற்றும் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு சமமாக கருதி, அரசுப் பணிகளில் வேலைவாய்ப்புக்கு அங்கீகாரம் அளித்து, 1997ல் அரசாணை வெளியிடப்பட்டது.   இந்நிலையில், அரசுப் பணிகள் தேர்வாணைய செயலர், இளங்கலை அறிவியல் (வேளாண்மை) படித்தவர்கள் தொகுதி 7க்கான நேரடித் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்துள்ளதாகவும், ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், இப்படிப்பு சேர்க்கப்படாததால், வேளாண்மை பட்டப் படிப்பையும் அத்துடன் சேர்க்க வேண்டுமென்றும் கேட்டிருந்தார். இதை பரிசீலித்த அரசு, இளங்கலை மற்றும் அறிவியல் இளநிலை (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்.,) பட்டப்படிப்புகளுக்குச் சமமாக அரசு அங்கீகாரம் அளித்துள்ள தொழிற்கல்விகளுடன் சேர்த்து, இளங்கலை அறிவியல் (பி.எஸ்சி., வேளாண்மை) மற்றும் இதர தொழிற் கல்வி பட்டப்படிப்புகளையும் சேர்த்து, பொதுப்பணியில் வேலைவாய்ப்பு வழங்க அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்