உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் கேட்டுக்கு மாணவர்களிடம் மவுசு இல்லே

எம்.பி.ஏ., படிப்பில் சேர  நடத்தப்படும்   "கேட்&' (காமன் அட்மிஷன் டெஸ்ட்) நுழைவுத்தேர்வு  இந்தாண்டு  கம்ப்யூட்டர் மூலம்  நடக்கிறது.  எனினும்,  தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த முறை சற்று குறைந்துள்ளது.எம்.பி.ஏ., படிக்க இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்.,)  சேர "கேட்&' நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம்.  முதன் முறையாக இந்தாண்டு,  கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. கம்ப்யூட்டர் முறையில் நடத்தப்படுவதால்,  மாணவர்கள் வசதிக்காக, பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 7 வரை உள்ள நாட்களில் நடைபெற உள்ளன. தேர்வு  எழுத இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 34 ஆயிரம் பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.   ஐ.ஐ.எம்., சார்பில் இத்தேர்வை, கம்ப்யூட்டர் மூலம் நடத்தும் பொறுப்பை "புரோமெட்ரிக்&' நிறுவனம் ஏற்றுள்ளது.  32 நகரங்களில் 105 மையங்களில்  தேர்வு  நடைபெற இருக்கிறது. எழுத்து தேர்வு  மூலம் இல்லாமல், கம்ப்யூட்டர் மூலம் நடப்பதால், மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த முறையை போல இல்லாமல் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்