பெண் குழந்தைகள் தினம்: பிரபலங்கள் வாழ்த்து
புதுடில்லி: தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறை பிரபலங்கள், தங்கள் மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, வாழ்த்து செய்தியை பகிர்ந்தனர்.தேசிய பெண் குழந்தைகள் தினம், ஆண்டுதோறும், ஜன., 24ல், நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், இந்த கொண்டாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதை முன்னிட்டு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட, பல்வேறு துறை பிரபலங்களும், தங்கள் மகள்களுடன் எடுத்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.பெண் குழந்தைகள் தினம் குறித்த தங்கள் வாழ்த்து செய்திகளையும், அதில் பகிர்ந்தனர்.இவைத் தவிர, பல்வேறு தரப்பு மக்களும், தங்கள் பெண் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.பிரதமர் வாழ்த்துபிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: பெண் குழந்தைகளையும், பல்வேறு துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளையும், இந்த நாடு வணங்குகிறது. பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் தரமான சுகாதாரம் கிடைக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.