கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி
சென்னை: முதல்வர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தி.மு.க., தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வர் கருணாநிதி அறக்கட்டளைக்கு வங்கியில் வைப்பு நிதியாக நான்கு கோடி ரூபாய் உள்ளது. இத்தொகைக்கான கடந்த மாத வட்டித் தொகை, மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை, 32 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக முதல்வர் வழங்கினார். வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்துபோகும் பயணச் செலவை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு தபால் மூலம் வரைவுக் காசோலை அனுப்பப்படுகிறது. நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ஒரு கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.