உத்திரமேரூர் கல்லுாரியில் நாளை வராண்டா சேர்க்கை
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2023- 24 கல்வி ஆண்டிற்கான வராண்டா மாணவர் சேர்க்கை நாளை துவங்குகிறது.இதுகுறித்து உத்திரமேரூர் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பு முனைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் உத்தரவின்படி உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2023-24ம் கல்வியாண்டிற்கான வராண்டா மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை காலை 9:30 மணிக்கு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., என அனைத்து பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடக்கிறது. அதன்படி நாளை பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கும், ஜூலை 5ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், ஜூலை 6ல் ஆதிதிராவிடருக்கும், ஜூலை 7ல் அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் சேர்க்கை நடக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.