உள்ளூர் செய்திகள்

யோகாவில் உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள்

தாரமங்கலம்: தாரமங்கலத்தில், பள்ளி மாணவர்கள், 2,000 பேர் யோகாவில் உலக சாதனை நிகழ்த்தினர்.சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் வேதாத்திரி மகரிஷியின், 113வது ஜெயந்தி விழா மற்றும் சுதந்திர தினத்தையொட்டி யோகா பேரணி நேற்று நடந்தது. பள்ளியில் யோகா விழிப்புணர்வு துவங்கியது. மாணவர்கள், யோகா செய்வதன் நன்மை பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திபேரணியாக வந்தனர்.கைலாசநாதர் கோவில் முன்புறம் பள்ளி மாணவர்கள், 2,000க்கும் மேற்பட்டோர் உலக சாதனைக்காக யோகா செய்தனர். நோபல் உலக சாதனை புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா வந்திருந்தார். மாணவர்கள் குழுவாக, 20 நிமிடத்தில், 85 யோகா ஆசனங்கள் நிகழ்த்தினர். இதை பார்த்த ஹேமலதா, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அறிவித்தார். அதை நடுவர் அங்கீகரித்தார். பள்ளி தலைவர் பூபதிராஜன், துணைத் தலைவர் ஜெயகுமார், தாளாளர் சுபலதா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்