உள்ளூர் செய்திகள்

போலி அங்கீகாரம்: ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ.,  ஐ.சி.எஸ்.இ., ஐ.பி., போன்ற பல்வேறு பாடத்திட்டத்தில், 10,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.இவற்றில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், தமிழக பள்ளிக்கல்வியின் அங்கீகாரத்துடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மற்ற பாடத்திட்ட பள்ளிகளில், அதற்கான வாரியங்கள் அங்கீகாரம் அளிக்கின்றன. இந்நிலையில், சில தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,  ஐ.சி.எஸ்.இ., போன்றவற்றின் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப் பம் மட்டும் சமர்ப்பித்து விட்டு, அங்கீகாரம் பெறாமலேயே, பல ஆண்டுகளாக பள்ளிகளை நடத்துவது தெரியவந்துள்ளது.இதுபோன்ற பள்ளிகளை கண்டறிந்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில், இடைத்தரகர்கள் சிலர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான அங்கீகார ஆவணத்தை போலியாக தயாரித்து, சில பள்ளிகளில் வசூல் வேட்டை நடத்திஉள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அனைத்து சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், அங்கீகாரம் மற்றும் அதற்கான ஆவணங்களின் உண்மைத்தன்மையை, நேரில் ஆய்வு செய்யுமாறு, தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்