உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பதிவுப்பணி பாதிப்பு

நாமக்கல்: மத்திய சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவோர், சர்வர் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர்.மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் குறித்த விபரங்களை இகேஒய்சியை ஆன்லைனில் பதிவு செய்ய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொது சேவை மையங்கள் மூலம் இப்பணி நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், 1,424 மாணவ, மாணவிகள் உதவித்தொகையை பெற்று வருகின்றனர். இவர்களை பதிவு செய்யும் பணி கடந்த, 14ம் தேதி தொடங்கியது. நாமக்கல், மோகனுார், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், வெண்ணந்துார், எலச்சிபாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பரமத்தி வேலுார், கபிலர் மலை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, 15 மையங்களில் இப்பணி நடந்தது.ஆனால், தொடங்கிய நாள் முதல் சர்வர் பிரச்னையால் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சர்வர் முழுவதும் முடங்கியதால், குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம், வெண்ணந்துார், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் நேற்று நடக்கவிருந்த பதிவு செய்யும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. பதிவு செய்ய வந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்