உள்ளூர் செய்திகள்

காளான் விதை உற்பத்தி தொழில் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் ஒருங்கிணைந்த காளான் அபிவிருத்தி திட்ட நிதியுதவியுடன், காளான் விதை மற்றும் உற்பத்தி குறித்த ஒருநாள் பயிற்சி நடந்தது. இதில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த, 100 மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். படிக்கும் போதே மாணவர்கள் தனியாகவோ, குழுவாகவோ இணைந்து வேளாண் தொழிலில் களம் இறங்கி தொழில்முனைவோராக, இப்பயிற்சி நோக்கமாக கொண்டதாக பல்கலை நிர்வாகிகள் தெரிவித்தனர். இத்தொழிலை சிறிய முதலீட்டில் துவங்கி, உரிய அனுபவத்துடன் விரிவுபடுத்தினால், பெரிய லாபம் அடையலாம் என்பதை திறந்தவெளி பயிலகத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணியம் விளக்கினார். பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி காளான்களில் உள்ள சத்துக்கள், அதன் உற்பத்தியின் அவசியம் குறித்து விளக்கமளித்தார். மேலும், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் காளான் வளர்ப்பு, விதை உற்பத்தி, காலநிலை மாறுபாடுகளில் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் செயல் விளக்கமாக காண்பித்தனர். இதில், துணைவேந்தர் கீதாலட்சுமி, பயிர் நோயியல் துறை தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்