உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் படிகளில் பயணம் அதிகாரிகளுடன் கலந்தாய்வு

காஞ்சிபுரம்: பள்ளி மாணவர்கள் படிகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்வது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி., சுதாகர் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது.இதில், காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூர், பெருநகர், கூத்திரம்பாக்கம், பனப்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் மாணவ - மாணவியர் அதிகளவில் படிகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்னறர். இதைத் தடுக்க பள்ளிக்கல்வி, போக்குவரத்து, காவல், மாநகராட்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், பேருந்து நிலையத்தில் மாணவர்களை முறைப்படுத்தி பேருந்தில் ஏற்ற பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் போலீசாரை நியமிக்க வேண்டும்.படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பற்றிய விபரங்களை, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் சேகரித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் அம்மாணவர்களின் பெற்றோரை அழைத்து தகுந்த அறிவுரை வழங்கி, மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்