கல்வியும், ஞானமும் சிறக்க கலைமகளிடம் பிரார்த்தனை
கோவை: நவராத்திரி விழாவின் முக்கிய நாட்களாக கருதப்படும் சரஸ்வதி,ஆயுத பூஜை விழா, நேற்று கோவில்களிலும், வீடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி)வழிபாடு. இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக, இந்த நவராத்திரி விழா உள்ளது.நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்களில், இரண்டாவது நாளான நேற்று சரஸ்வதி தேவியை ஆராதனை செய்து அம்பாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.