உள்ளூர் செய்திகள்

பொம்மை, மண்பானை பிரின்டிங் இலவச பயிற்சி

மதுரை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) சார்பில் மதுரையில் ஆடவர், மகளிருக்கான பொம்மை, மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் மெழுகு, ஸ்கிரீன் பிரின்டிங் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.களிமண் பொம்மை, காகித கூழ் பொம்மை தயாரிக்க ஒருமாதம் பயிற்சி. மண்பாண்ட கலைப்பொருட்கள் தயாரிக்கவும் சுங்குடி துணியில் மெழுகு, ஸ்கிரீன் பிரின்டிங், சேலையில் முடிச்சு கட்டுதல் குறித்து 3 மாதம் பயிற்சி அளிக்கப்படும். குறைந்தது 8 ம் வகுப்பு முடித்த 35 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாதம் ரூ.12,500 ஊக்கத்தொகை, மதிய உணவு, பயிற்சி கையேடு வழங்கப்படும். சான்றிதழுடன் தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் போட்டோ, ஆதார் அட்டை, கல்விச்சான்றுகளுடன் அணுக வேண்டிய முகவரி: சிப்போ, 52, டி.பி. ரோடு, மகபூப்பாளையம், மதுரை, போன்: 0452 - 260 2339.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்