போட்டி தேர்வு அட்டவணை: டி.ஆர்.பி., காலதாமதம்
பள்ளிக்கல்வி துறையில், 13,000 ஆசிரியர்கள் பணியிடங்களும், உயர் கல்வித் துறையில், 6,000த்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களும், காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, அரசு இன்னும் உரிய முடிவெடுக்காததால், தேர்வு அட்டவணை தாமதமாகி உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து, பட்டதாரிகள் கூறுகையில், டி.ஆர்.பி., சார்பில், போட்டி தேர்வுகள் எப்போது நடத்தப்படும்; எந்தெந்த பதவிக்கு காலியிடங்கள் நிரப்பப்படும் என, முன்கூட்டியே அறிவித்தால், அந்த தேர்வுகளுக்கு தயாராக முடியும். எனவே, வருடாந்திர அட்டவணையை விரைந்து வெளியிட வேண்டும் என்றனர்.