பள்ளி இடமாற்றம் செய்ய பெற்றோர் கோரிக்கை
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட அரசு துவக்கப் பள்ளியை கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்ற வேண்டி பெற்றோர்கள் கல்வித்துறை அமைச்சருக்கு மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது: நெட்டப்பாக்கம் அரசு துவக்கப் பள்ளி புனரமைப்பு பணி காரணமாக கடந்த 5ம் தேதி பண்டசோழநல்லுார், கரியமாணிக்கம் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.சிறுவயது குழந்தைகள் பக்கத்து ஊர்களுக்கு அழைத்து செல்லும் போது பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. அதேசமயம் தினமும் கூலிவேலைக்கு சென்று வரும் பெற்றோர்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று மாணவர்களை அழைத்து வர பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ஆகையால், மாணவர்கள் பள்ளி இடமாற்ற உத்தரவை ரத்து செய்து, அதே பகுதியில் இயங்கும் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.