கண்டக்டரை தாக்கிய கல்லுாரி மாணவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரசு பஸ் கண்டக்டர் விஜயகுமார். திண்டுக்கல்- கோபால்பட்டி அரசு பஸ்சில் பணியில் இருந்த போது , நத்தம் ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரிக்கு செல்வதற்காக தேனி மாவட்டம் சின்னமனுாரை சேர்ந்த 19 வயது கொண்ட கல்லுாரி மாணவர் ஏறினார். படிக்கட்டில் நின்றதால் பஸ் உள் வருமாறு விஜயகுமார் கூறினார். இருவர் இடையே தகராறு ஏற்பட்டதில் மாணவர் விஜயகுமாரை தாக்கினார். வடக்கு போலீசார் கல்லுாரி மாணவரை கைது செய்தனர்.