உள்ளூர் செய்திகள்

மணல் சிற்பம் வடித்து தேர்தல் விழிப்புணர்வு

மாமல்லபுரம்: லோக்சபா தேர்தலில், வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் வடித்து, சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாமல்லபுரம் அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்கள், முதல்வர் ராமன் மேற்பார்வையில், மணல் சிற்பம் வடித்தனர்.அதில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர் என, அனைத்து தரப்பினரும், 100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி, இந்திய வரைபடத்துடன் சிற்பங்கள் இடம்பெற்றன. இதுகுறித்து, மாணவர்கள் உறுதிமொழி ஏற்று, சுற்றுலா பயணியரிடம், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்