உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு

பந்தலுார்: பந்தலுார் அருகே கரிய சோலை அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி குடிமக்கள் மன்றம் சார்பில், தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உலக நீர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ஆசிரியர் நிரோஷா வரவேற்றார். தலைமை ஆசிரியர் புளோரோ குளோரி தலைமை வகித்தார். பொறுப்பாசிரியர் மணி வாசகம், உலக நீர் நாள் கடைப்பிடிப்பதன் அவசியம் மற்றும் தண்ணீரின் தேவை மற்றும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.ஆசிரியர் மார்கிரேட் மேரி தண்ணீர் சேமிப்பது மற்றும் எதிர்கால தண்ணீர் தேவை குறித்து விளக்கினார். உலக நீர் நாள் மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்து ஓவிய மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, தண்ணீரை பாதுகாப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆசிரியர் மேகலா மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் நிஷாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்