உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி அட்மிஷன் அதிகரிக்க முனைப்பு

திருப்பூர்: தேர்வுகள் துவங்கும் முன், புதிய கல்வியாண்டுக்கான அட்மிஷன் துவங்க கல்வித்துறை உத்தரவிட்டது. தொடக்கல்வி துறை மூலம் மார்ச் இரண்டாவது வாரம் முதல் இதற்கான பணிகள் சுறுசுறுப்பாகியது. இந்நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் தொடர்ந்து அட்மிஷன் நடக்கவுள்ளது.மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு வரும் பெற்றோரை ஈர்க்க, பள்ளி முகப்புகளில் கல்வித்துறை சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர், முத்துப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்ஸில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது, என குறிப்பிடப்பட்டுள்ளது.நொய்யல் வீதி பள்ளி பிளக்ஸ் பேனரில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் உள்ளது. காலை உணவுத் திட்டம், இல்லம்தேடி கல்வி திட்டம், தனித்திறனை வளர்க்க கலை இலக்கிய பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது, என குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளி முகப்பு, கரும்பலகையில் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும், எழுதி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்