உள்ளூர் செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு: வினாடி வினா போட்டி

காரைக்கால் : காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர் வினாடி வினா போட்டி நடந்தது.காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல்துறை சார்பாக நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வினாடி வினா போட்டி ப.சண்முகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி துணை முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார். கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் கிராமபுற மக்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்., அலுவலர் மேகலா, தமிழ் விரிவுரையாளர் லங்கேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்