உள்ளூர் செய்திகள்

அவினாசிலிங்கம் பல்கலை விளையாட்டு தின விழா

கோவை: அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் ஆண்டு விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.விளையாட்டு விழாவுக்கு பாரதியார் பல்கலையின் முன்னாள் பதிவாளர் முருகவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடி ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள், சிலம்பம், யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.விழாவில், அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், முன்னாள் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், உடற்கல்வித்துறை இயக்குனர் நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்