உள்ளூர் செய்திகள்

மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.மதுரை தோப்பூரில் 221 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நிதி நிறுவனமான ஜெய்க்காவுடன் 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.1977.8 கோடியில் 82 சதவீதம் (ரூ.1627.70 கோடி) கடனாக தர முன்வந்தது. 2023 ஆகஸ்ட் 17ல் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. ஜெய்க்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை கிடைத்த நிலையில் 33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.எல் அன்ட் டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024 மார்ச் 14ல் கட்டுமான முன் பணிகளை இந்நிறுவனம் துவக்கியது.மே 2ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. மே 10ல் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்தது.இதனை தொடர்ந்து நேற்று (மே 20) எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது. ஏற்கனவே கட்டுமான முன் பணிகளை தொடங்கி உள்ள எல் அன்ட் டி நிறுவனம் விரைவில் கட்டுமான பணிகளை துவக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்