பள்ளி மாணவர்கள் மோதல்: பெற்றோருக்கு அறிவுரை
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் அண்ணா நகரில் கடந்த வாரம் கபடி போட்டி நடந்தது.அப்போது, டவுன் பஞ்., ஒரு பகுதியில் இருந்து கபடி போட்டியை பார்க்க வந்த மாணவர்களுக்கும், அண்ணா நகரை சேர்ந்த மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த, 23ல் ஜங்கலாபுரம் - காந்திபுரம் பிரிவு ரோட்டில் மீண்டும் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியர், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர், மாணவர்களை வரவழைத்து சேந்த-மங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ்அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.