உள்ளூர் செய்திகள்

எந்த ஆட்சியில் அதிக பள்ளி கட்டடங்கள்

சென்னை: அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: பள்ளிகளை மேம்படுத்தும் பணிகள் ஐந்தாண்டுகளில், 7,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளி கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளதால், மரத்தடியில் பாடம் எடுக்கும் அவல நிலை உள்ளது.அமைச்சர் பெரியசாமி: பத்து ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் எவ்வளவு பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டன என்று சொல்ல முடியுமா.செல்லுார் ராஜு: கையில் புள்ளி விவரங்கள் இல்லை; நாளை சொல்கிறேன்.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: அ.தி.மு.க., ஆட்சியில்தான் ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. நிறைய பள்ளி கட்டடங்களை கட்டி கொடுத்துள்ளோம்.அமைச்சர் மகேஷ்: அ.தி.மு.க., ஆட்சியில், 525 பள்ளிகள், எந்த உள்கட்டமைப்பும் இல்லாமல் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதை நான் சொல்லவில்லை. தணிக்கை அறிக்கையில் உள்ளது. வரும் 2027ம் ஆண்டுக்குள், 18,000 வகுப்பறைகள் கட்டி தரப்படும். இதுவரை, 7,500 பள்ளி கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டு உள்ளன. பொதுப்பணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்கள் போட்டி போட்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை நீங்கள் பாராட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்